Wednesday, July 20, 2005

(ஈழத்) தமிழர் வரலாற்றில் ஜூலை......!


கிட்டத்தட்ட நான் மறந்து விட்ட நிலையில்... தினக்குரல் பத்திரிகையில் நான் வாசித்த திருப்பு முனைகளை ஏற்படுத்திய ஜுலை [ஞாயிறு தினக்குரல் 17 ஜூலை 2005 ] கட்டுரையில் இருந்து ஒரு பகுதி!


தமிழர் வரலாற்றில், வரலாற்றுக் கறைபடிந்த, வீரம் செறிந்த தடங்களை பதித்த ஜூலை மாத நிகழ்வுகள்.

19.07.1957: சிங்கள "ஸ்ரீ'க் கெதிராக தமிழரசு கட்சி சட்ட மறுப்பு போராட்டம்.
26.07.1957: பண்டாசெல்வா உடன்படிக்கை.
20.07.1960: ஐந்தாவது பொதுத்தேர்தல். திருமதிபண்டாரநாயக்க தலைமையில்சிறிலங்கா சுதந்திரக் கட்சி பதவியேற்பு: தமிழரசு கட்சி 21 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில்வெற்றி.
19.07.1970: புதிய அரசியல்அமைப்பை அமைக்க அரசியல் நிர்ணயசபையின் தொடக்க கூட்டம்.
15.07.1971: அரசியல் நிர்ணயசபையை விட்டுவெளியேற மறுத்த எம்.பி.மாட்டின்.
06.07.1974: கச்சதீவை இத்தியாவுக்கு கொடுப்பதற்கான உடன்படிக்கை.
27.07.1975: யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை.
21.07.1977: பொதுத் தேர்தல் 4/5 பெரும்பான்மையுடன் ஐ.தே.க.ஆட்சியமைப்பு, 18 இடங்களை கைப்பற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணி பிரதான எதிர்க்கட்சியானது.
20.07.1978: புலிகளைதடை செய்வதற்கான பயங்கர வாததடைச்சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்.
01.07.1981: யாழ். நூல்நிலையம் எரிப்பு.
17.07.1981: யாழ். ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம் மீதுதாக்குதல் 2 பொலிஸார்பலி; 4 பேர் காயம்.
02.07.1982: நெல்லியடியில் பொலிஸ்ஜீப் தகர்ப்பு: 4பொலிஸார்பலி.
15.07.1983: புலிகளின் மூத்ததளபதி லெப். சீலன் வீரச்சாவு.
23.07.1983: புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரில் களமிறங்கிய யாழ். திருநெல்வேலிதாக்குதல். 13 இராணுவத்தினர் பலி: ஆயுதங்கள் மீட்பு.
24.07.1983: வரலாற்றுக் கறைபடிந்த தமிழர்களுக்கெதிரான இனக் கலவரம். 1,000 க்கு மேற்பட்டோர் படுகொலை, படுகாயம் 4,000 பேர், வல்லுறவு 600 க்கு மேல்.
25.07.1983: வெலிக்கடைசிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், தாமு கந்தையா உட்பட 53 பேர் கண்தோண்டி பின் வெட்டிக் கொலை.
08.07.1985: திம்பு பேச்சுவார்த்தைகள்.
05.07.1987: நெல்லியடி இராணுவமுகாம் மீது முதன் முதலில் கரும்புலித்தாக்குதல். கரும்புலி கப்டன் மில்லர் வீரச்சாவு: 100 க்கு மேற்பட்ட இராணுவம் பலி.
17.07.1987: ஜனாதிபதி ஜே.ஆர். தமிழரின் பிரச்சினை தொடர்பாக இந்தியதூதருடன் பேச்சு.
19.07.1987: விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுடன் இந்திய இராஜதந்திரிகள் பேச்சு.
27.07.1987: இந்தியத் தூதுவர் டிக்ஸிற், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் பேச்சு.
29.07.1987: இலங்கை இந்தியா ஒப்பந்தம்.
30.07.1987: இந்தியப்படை தமிழீழத்திற்கு வருகை.
10.07.1990: கட்டளைக் கப்பல் மீது கரும்புலி தாக்குதல். 3 கரும்புலிகள் வீரமரணம்.
11.07.1990: கொக்குவில் இராணுவ முகாம் புலிகளால் தகர்ப்பு.
10.07.1991: மட்டக்களப்பு முத்துகால படுகொலைகள்.
12.07.1991: திருமலை கிண்ணியடி படுகொலைகள்.
05.07.1992: ஆனையிறவு இயக்கச்சியில் வை.2 விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
26.07.1992: ஆகாய, கடல், வெளிச்சமர். கொக்குத் தொடுவாய் சமர்.
25.07.1993: மண்கிண்டி இராணுவமுகாம் ஆயுதக்கிடங்கு புலிகளால்கைப்பற்றப்பட்டது.
09.07.1995: நவாலி தேவாலயம் மீது விமானக்குண்டு வீச்சு இடம் பெயர்ந்து தங்கியிருந்த 247 பொது மக்கள் பலி.
13.07.1995: வலிகாமம் மீது இராணுவத்தின் முன்னேறிப்பாய்ச்சல் இராணுவநடவடிக்கை.
17.07.1995: காங்கேசன் துறைமுகத்தில்வைத்து "எடித்தர" கட்டளைக் கப்பல்தகர்ப்பு. கரும் புலிகள்தாக்குதல்.
18.07.1996: விடுதலைப் புலிகளின் ஓயாதஅலை 1 இராணுவநடவடிக்கை.
26.07.1996: இராணுவத்தினரின் "சத்ஜெய" இராணுவ நடவடிக்கை.
20.07.1998: முல்லைத்தீவு சுதந்திரபுரம் கிராமம் மீது கிபிர் குண்டு வீச்சு 25 பொது மக்கள் பலி.
24.07.2001: கட்டுநாயக்க விமானத்தளம் மீது புலிகள் தாக்குதல் 28 வான்கலங்கள் அழிப்பு.

நன்றி
தினக்குரல்

2 Comments:

At 21 July, 2005 19:38 , Blogger கறுப்பி said...

நோநோ, எல்லா மாதங்களுமே இலங்கையருக்கு துக்கம் அனுசரிக்கும் மாதங்கள்தான். கறுப்பு ஜூpலை. ஓகஸ்ட் கடைசியில் என்று நினைக்கின்றேன். கவிஞர் செல்வி கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டது. இப்படி ஒவ்வொரு மாதத்திலும் நாம் துக்கம் அனுசரிக்க ஏதாவது இருந்து கொண்டுதான் இருக்கும்.

 
At 24 July, 2005 09:02 , Blogger NONO said...

கறுப்பிக்கு...!!

"எல்லாத்தையும்" இந்த கறுப்புக
ஜூலையோடு ஒப்பிடமுடியுமா கறுப்பி...? மொத்த தமிழ் இனத்துக்கும் மீது கட்டவிழ்துவிட்ட பேரினவாதிகளின் தீவிரவாதம்! எல்லா தமிழரால் முக்கியமாக துக்கம் அனுசரிக்கவேண்டிய நாள் என்றே எனக்குபடுகின்றது!!!!!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home