Thursday, July 14, 2005

பயனிகள் கவணத்துக்கு!!!! கொல்லிமலையில் குள்ளமனிதர்கள்!!

குள்ளமனிதர்கள் பெயரில் கொல்லிமலையில் நடைபெற்று உள்ள மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வவ்வால், தேவாங்கு போன்ற பறவை இனங்களையே குள்ளமனிதர்களாக காட்டி அறங்கேறிய மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

5.5 அங்குல உயரம் கொண்ட குள்ளமனிதர்கள் காடுகளில் பரவலாக வசித்து வருவதாக சமீபகாலங்களாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது. சிறப்பு பூஜையின் மூலம் வரவழைக்கப்படும் இந்த குள்ளமனிதர்களை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டால், கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளின் மூலம் மோசடிக்காரர்கள் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டு காலமாகவே நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள காடுகளில் இந்த மோசடிகள் நடந்துள்ளது. இதற்கென கொல்லிமலை பகுதியில் புரோக்கர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் குள்ளமனிதர்கள் வசிக்கும் இடம் கொல்லிமலையில் உள்ள குகைகள் என்று கூறி சுற்றுலா பயணிகளை குகைக்கு அழைத்து செல்வதும், பின்னர் குகையில் உள்ள வவ்வால், தேவாங்கு போன்ற பறவைகளை குள்ளமனிதர்களாக ஜொடித்து காட்டுவதும் நடந்துள்ளது.

உண்மையை தெரிந்து கொண்ட சுற்றுலாபயணிகள் பணத்தை திருப்பி கேட்டால் அவர்களை மிரட்டி அங்கிருந்து அனுப்பிவிடுவார்கள்.

நன்றி
தினகரன்
http://www.dinakaran.com

ஆகவே கொல்லிமலைக்கு போகிறீர்களா கவணம்... ஏமாந்து விடாதீர்கள்...!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home